மேஷம் முதலான 12 லக்னங்களில் பிறந்த பெண்களின் பொதுவான தோற்றம் மற்றும் இயல்புகளை இங்கு காண்போம்.

மேஷ லக்னம்

Advertisment

மெலிலிந்த உடலும் நீண்ட கழுத்தும் கொண்டவர். பற்கள் சற்று நீண்டிருக்கும். அழகும், கவர்ச்சியும் இருக்கும். உயரமானவர்போல் காட்சியளிப்பர். நடையழகுண்டு. பொறுமையானவர். எளிதில் கோபமடைவார். கணவரிடம் அன்புடையவர். வம்புச்சண்டை போடுவதில் வல்லவர். நீண்டதூரம் நடக்க, பயணம் செய்யப்பிடிக்காது. குடும்பப் பொறுப்பு மிக்கவர். குடும்பக் கஷ்டத்தைத் தாங்குமளவுக்கு மனோதிடம் குறைவு. பெண்கள் விரோதியாக இருப்பர். அம்மா, மாமியார், உடன்பிறந்தோர், நாத்தனார் என பெண்கள் நன்றி மறந்தவர்களாகவே இருப்பர். ருசியாக சமைக்கக்கூடியவர். விதண்டாவாதம் செய்வதில் வல்லவர். சிலநேரம் இரக்கமற்று நடந்துகொள்வார். தற்பெருமை பேசுவார். வீணான காரியத்திற்கு நேரத்தைச் செலவிடுவார். பெண்களிடம் மனம்விட்டுப்பேசுவது, விட்டுக்கொடுத்தல் போன்ற குணங்கள் இல்லாததால் நிம்மதி இழந்தே காணப்படுவார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்.

ரிஷப லக்னம்

எதிலும் சுத்தமாக, அழகாக இருக்கவேண்டுமென்ற எண்ணம் கொண்டவர். தன்னைப்போல மற்றவரும் இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும். நடுத்தர உயரம், நெற்றி விலாசம் கொண்டவர். கழுத்து குட்டையாக இருக்கும். எதிர்வரும் பிரச்சினைகளை சந்தித்து சமாளித்து நடக்கக்கூடியவர். எடுத்த காரியங்களை முடிக்காமல் நிம்மதியடையமாட்டார். சிறப்பாகப் பணிசெய்வார். ஆடை, ஆபரணம் சேர்க்க விரும்புவார். ஆடம்பர வாழ்க்கை வாழ நினைப் பார். பிறரைக் கெடுக்க நினைக்கமாட்டார். பாசம்மிக்கவர். தலைசிறந்த நிர்வாகி. குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நல்ல நண்பர்கள், உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். உற்றார்- உறவினர் குறைவு. சின்ன விஷயத்தைப் பெரிதாய்க் கற்பனை செய்து கொள்வார். தைரியம் குறைந்தவர். சகிப்புத்தன்மை கொண்டவர். தெளிவான பேச்சு; வாக்கைக் காப்பாற்ற நினைப்பார். பணப் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். யாருக்கும் அறிவுரை சொல் லவும் மாட்டார்; கேட்கவும் மாட்டார்.

மிதுன லக்னம்

கவர்ச்சியான தோற்றம், உயரம், எடுப்பான மூக்குடை யவர். சிலருக்கு சுருண்ட முடி இருக்கும். தற்புகழ்ச்சி விரும்புவார். தைரியசாலிபோல் காட்டிக் கொள்வார். உண்மையில் பயந்த சுபாவம் மிக்கவர். ஊர்வம்பு பேசுவார். நண்பர்கள் குறைவு. பண விஷயத்தில் கவன மாக இருப்பார். கருமி என்ற பெயருண்டாகும். தாமதமான திருமண வாழ்க்கையே மகிழ்ச்சி தரும். பேச்சுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்கும். மேதாவிபோல் காட்டிக்கொள்வார். லட்சியமற்றவர். தோல்வி ஏற்பட்டால் பிறர் மேல் பழிபோட்டு தப்பித்துக்கொள்வார். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பல கலைகள் கற்க ஆசைப்பட்டு எதையும் முழுதாய்க் கற்றுக்கொள்ள முடியா தவர். நாத்திகர்போல் காட்டிக்கொண்டாலும் கடவுள் பக்தி நிறைந்தவர். கடன் வாங்கி செலவு செய்யத் தயங்கமாட்டார்.

கடக லக்னம்

Advertisment

சராசரி உயரம், சிவந்த அல்லது புது நிறமான உடலமைப்பு கொண்டவர். உருண்டையான முகம், உடல் கொண்டவர். பொறுமை குறைவு. அகன்ற நெற்றி, நீண்ட மூக்கு, கழுத்து தடிப்பாக இருக்கும். அழகிய பற்கள் கொண்டவர். மனதிற்குள் ஒன்றை நினைத்துக்கொண்டு வெளியில் ஒன்று பேசுவார். முயற்சி செய்தால் பெரிய பதவி, புகழை அடைவார். காரியம் சாதிக்க வேண்டு மென்றால் இவர்களைப் புகழ்ந்தால் போதும். அலைந்து திரிவதில் நாட்டம் கொள்பவர். அலட்சியமான போக்குண்டு. பழைமையைப் போற்றுவார். தன்னைவிட உலகில் சிறந் தவர் யாருமில்லை என்ற எண்ணமுண்டு. "நண்டு கொழுத்தால் வளையில் தங்காது' என்பதுபோல் நடந்துகொள்வார். குடும்பப் பொறுப்பானவர். சிரித்த முகத்துடன் நன்கு உபசரிப்பார். எளிதில் உணர்ச்சி வசப் படக்கூடியவர். சுக, துக்கங்களை வெளிக் காட்டிக் கொள்ளாதவர்.

சிம்ம லக்னம்

கம்பீரமான தோற்றம், மிடுக்கு, யாருக்கும் பணியாத சுதந்திரப் போக்குடன் இருப்பார். உயரத்திற்கேற்ற பருமன், அகன்ற மார்பு, வேகமாக நடக்கும் வல்லமை உண்டு. நீண்ட கரங்கள் கொண்டவர். கணவர் தன் பேச்சைக் கேட்க வேண்டுமென்று நினைப்பார். தாமதத்திருமணம் சிறப்பு. எதிலும் முரட்டுத் தனம் இருக்கும். உற்றார்- உறவினர், நண்பர்கள் யாவரையும் பகையாக எண்ணுவார். கணவரை உண்மையாக நேசிப்பார். குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும். பிடிவாதம் கொள்பவர். உழைப்பாளி. போராடி வெற்றிபெறுவார்.

கன்னி லக்னம்

12

Advertisment

மெதுவாக, இனிமையாகப் பேசக்கூடி யவர். கண்கள் சிறியதாக இருக்கும். உயரம் குறைந்த, கரிய விழியுடையவராக இருப்பார். வெட்கப்படும் சுபாவமுண்டு. முன்யோசனை, தன்னம்பிக்கை இயலாதவர். சுயநலமிக்கவர். பண விஷயத்தில் கவனமாக இருப்பார். சிலருக்கு கன்னக்குழி விழும். பிறரை நம்பா தவர். தான் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போது மென்ற எண்ணம் கொண்டவர். வீடு, அலுவல கத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வார். குழந்தை, கணவர்மேல் பாசம் கொண்டவர். இளமையான தோற்றம் இருக்கும். கணவருக்கு அடக்கமான, பிரியமானவராக நடப்பார். குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவர்.

துலா லக்னம்

கூச்ச சுபாவம் கொண்டவர். உறுதியான உடல், முகக் கவர்ச்சி இருக்கும். பிரகாசமாக இருப்பார். எல்லாம் தனக்குத் தெரியுமென்ற எண்ணம் கொண்டவர். எந்த வேலையும் சுலபமாகச் செய்யக்கூடியவர். எதிர்பார்ப் புக்கேற்ற கணவர் அமையமாட்டார். கணவனை அனுசரித்து நடந்துகொள்ளும் பண்புமிக்கவர். இரக்க குணம் கொண்டவர். பண விஷயத்தில் கண்டிப்புடன் இருப்பார்.

பிறக்கு உதவும் குணமுண்டு. மற்றவர்களால் இவர்களுக்குத் துன்பம் தரமுடியாது. இவர்களுக்கு வரும் கஷ்டம் இவர்களால் தான் ஏற்படும். துணிச்சலாகப் போராடுவார்.

இவர்கள் நல்லவர்களாகவே காட்டிக் கொள்ளும் திறமைசாலிகள். செய்யும் தீமை யைப் பிறருக்குத் தெரியாமலும், யாராலும் கண்டுபிடிக்காதபடியும் செய்வார்.

விருச்சிக லக்னம்

மிதமான உயரம், அழகிய தோற்றம், அழகிய கண்கள் கொண்டவர். நெற்றி உயர்ந்து பருத்திருக்கும். சிறந்த அறிவாளி யாக இருப்பார். வாதம்புரிவதில் வல்லவர். பொறுமையானவர். உள்ளொன்று வைத்து வெளியொன்று பேசுவார். பிறரை ஏளனம் செய்வார். எச்சரிக்கையானவர். முன்கோபி. குத்திக் காட்டிப் பேசும் இயல்பு கொண்டவர்.

உதவிகள் செய்தாலும் பின் சொல்லிக் காண் பிப்பார். சுய கௌரவம் பார்க்கக்கூடியவர். வேண்டியவர்களுக்கு உயிரையும் தருவார். வேண்டாதவர் என்றால், எந்த உறவாக இருந்தாலும் பகைத்துக்கொள்ளத் தயங் காதவர். சந்தோஷமாக வாழ ஆசைப்படு வார். கணவரின் வார்த்தைக்கு மதிப்பு தருபவர்.

யாரையும் பார்த்தவுடன் எப்படிப் பட்டவர் என்று கண்டுபிடித்துவிடுவார். யாரிடமும் சந்தேகத்துடன் பழகுவார். பிடிவாதகுணம் உண்டு.

தனுசு லக்னம்

தடித்த உடல், நீண்ட கழுத்து, திரண்ட புஜம் கொண்டவர். மூக்கு, காது, உதடு தடித்திருக்கும். வெள்ளை மனம் கொண்டவர்.

உண்மை, நேர்மை உள்ளவர். தைரியசாலிலி. செய்ந் நன்றி மறக்காதவர். பாகுபாடின்றிப் பழகக் கூடியவர். புகழுக்கு மயங்கக்கூடியவர். தூய்மையாக இருக்க விரும்புவார். குடும்பப்பொறுப்பு மிக்கவர். நடக்கும்போது முதுகு சற்று வளைந்து "கூன்' போட்டதுபோல நடப்பார். மற்ற பெண்களிடம் சண்டை போடும் குணம் இயற்கையாக இருக்கும். கணவரின் கட்டுப்பாட்டில் இருக்காவிட்டால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்காது.

மகர லக்னம்

தலை பெரியதாக இருக்கும். நீண்ட வட்ட முகம், தடித்த தோலுடன் நீலம் கலந்த கருவிழி கொண்டவர். சிறுவயதிலேயே தோற்ற முதிர்ச்சி இருக்கும். துணிச்சல்மிக்கவர். சுயநல வாதி. தனக்குத் தேவையென்றால் துணிந்து காரியத்தில் இறங்குவார். தற்பெருமை கொண் டவர். சிறிய விஷயத்தைப் பெரிதுபடுத்திப் பேசுவார். தன் தவறை மறந்து பிறர் செய்த தவறைச் சுட்டிக்காட்டிப் பேசுவார். அறிவாளி போல் காரியத்தில் இறங்கி தோல்வி அடைவார்.

நேரத்திற்கு ஒன்று பேசுவார். அளவான குடும்பம், குடும்பப் பாசம் இருக்கும். நல்லவர் களுக்கு நல்லவராகவும், தீயவருக்கு தீயவரா கவும் தெரிவார். கணவரும் இவருக்கேற்றபடி அமைவார்.

கும்ப லக்னம்

நீண்ட உடல், பருத்த தொடை, கால், விரிந்த முதுகு, நீண்ட கழுத்துடன் இருப்பார். வட்ட முகத்துடன் உயரம் குறைந்தவராக இருப்பார். கூந்தல் சிறப்பாக இருக்காது. கடின உழைப்பாளி. இரக்ககுணம், உண்மை பேசக்கூடியவர். பிறர்வாழ அறிவுரை சொல்லிலி, நன்றாக இருப்பதைப் பார்த்து தனக்கு நல்லது நடக்கவில்லையே என ஆதங்கப்படுவார். இவர்களுக்கு உதவி கிடைப்பது கடினம். தான் என்ற எண்ணம் உண்டு. நண்பர் குறைவு; எதிரி அதிகம். கள்ளங்கபடமின்றி அனைவரிடமும் பழகுவார். பொருந்தாத கணவரே பெரும்பாலும் அமைந்துவிடுகிறார். அழுத்தம் திருத்தமாகப் பேசுவார். பகுத்தறிவுவாதி. சோம்பேறி. எதையும் மனதிற்குள் வைத்துப் புழுங்குவார். கடவுள் நம்பிக்கை குறைந்தவர். குடும்பத்தினரே எதிரியாக இருப்பர்.

மீன லக்னம்

தோற்ற அழகு கொண்டவர். நீலநிற விழியழகுண்டு. நடுத்தர உயரம், உடல் பருமன் உள்ளவர். அடிக்கடி மனம் மாறும் சுபாவமுண்டு. நேர்மையுடன் வாழ்வார். தெய்வ நம்பிக்கை, ஆச்சாரம் பின்பற்றுவார். கற்பனையுலகில் வாழ்வார். பிறர் பொருள்மேல் ஆசை ஏற்படும். யாரையும் பார்த்தவுடன் எடை போடுவார். ரகசியங்களை வெளியே சொல்லமாட்டார். கலகலவென சிரித்து வாழ்வார். கஷ்டங்களை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார். சுய கௌரவம் பாதிக்க அனுமதிக்கமாட்டார். தவறு செய்தால் தைரியமாக ஒப்புக்கொள்வார். யாருக்கும் கெடுதல் நினைக்காதவர். ஞாபகசக்தி குறைவு.

முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவார். கணவனிடம் அன்பு, பக்திமிக்கவர். குடும் பத்தைத் திறமையாக நடத்துவதில் வல்லவர். அடிமையாக வாழ விரும்பமாட்டார்.

லக்னத்துக்கு சுபகிரகங்களின் பார்வை, லக்னாதிபதியுடன் சுபகிரக இணைவு நல்ல குணத்தையும், வாழ்க்கையில் அதிக நன்மையும் செய்யும். பாவகிரகப் பார்வை, லக்னாதிபதி பலம் குறைந்தால் தீய குணங்களும், தீமையான பலன்களும் அதிகம் ஏற்படும்.

செல்: 96003 53748